/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வணிக நிறுவனங்களில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு; கலெக்டர் எச்சரிக்கை
/
வணிக நிறுவனங்களில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு; கலெக்டர் எச்சரிக்கை
வணிக நிறுவனங்களில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு; கலெக்டர் எச்சரிக்கை
வணிக நிறுவனங்களில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு; கலெக்டர் எச்சரிக்கை
ADDED : அக் 26, 2024 07:31 AM
கள்ளக்குறிச்சி : வணிக நிறுவனங்களில் வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும்.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடைகள், உணவகங்கள், ஸ்வீட் ஸ்டால் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் 19 கிலோ உடையுடைய வர்த்தக பயன்பாட் டிற்கு விற்பனை செய்யப்படும் காஸ் சிலிண்டர் களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கிராம் கொண்ட காஸ் சிலிண்டர்களை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வணிகர்கள் மீறி வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.