/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டுமனை பட்டா கலெக்டர் ஆய்வு
/
வீட்டுமனை பட்டா கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 06, 2025 07:30 AM

கள்ளக்குறிச்சி : ஏமப்பேர் பகுதியில் வீட்டுமனை பட்டா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், 5 ஆண்டுகளுக்கு மேல், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதில் ஏமப்பேர் பகுதியில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பதாக, 36 குடும்பத்தினர் கணக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நிலஅளவீடு செய்து உட்பிரிவு ஆவணங்கள் மற்றும் லே-அவுட் வரைபடம் தயார் செய்தல் பணி, பட்டா வழங்கப்படும் பரப்பு விவரங்கள் குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளை பார்வையிட்டார். ஆய்வின் போது தாசில்தார் பசுபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.