/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டுமனை பட்டா கலெக்டர் அறிவுறுத்தல்
/
வீட்டுமனை பட்டா கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மார் 29, 2025 05:11 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் பேரூராட்சியில் வீட்டுமனை பட்டா பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
தமிழக அரசு நகராட்சி, பேரூராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வரன்முறை படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு மற்றும் காட்டுவனஞ்சூர் பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்குதல் தொடர்பான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். இதில் மேட்டுத்தெருவில் 9 பேருக்கும், காட்டு வனஞ்சூர் பாட்டை பகுதியில், 4 பேருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும், அரசு விதிமுறைப்படி பயனாளிகளை தேர்வு செய்து வரன்முறைபடுத்தப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், தாசில்தார் விஜயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.