/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவிக்கு கத்தி வெட்டு சந்தேக கணவர் கைது
/
மனைவிக்கு கத்தி வெட்டு சந்தேக கணவர் கைது
ADDED : ஏப் 11, 2025 06:23 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, நெற்குன்றம், வள்ளியம்மை நகர் சேர்ந்தவர் ராமசாமி, 39; இவரது மனைவி கீர்த்தனா,28; இவர்களுக்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் உட்பட, இரு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதி காய்கறி மார்க்கெட்டில், ராமசாமி கூலி வேலை செய்து வருகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 8ம் தேதி கீர்த்தனா, தனது இரு பிள்ளைகளுடன் கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். ராமசாமியும் நேற்று முன்தினம் அங்கு வந்தார்.
குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அறிவுரையை தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆகினர். தொடர்ந்து நேற்று அதிகாலை 6:00 மணிக்கு கீர்த்தனாவில் மொபைலில், அலாரம் அடித்தது.
அப்போது எழுந்த ராமசாமி, இந்த நேரத்தில் ஏன் அலாரம் அடித்தது எனக்கேட்டு, மனைவியை திட்டி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது முகம், கையில் வெட்டினார். குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து ராமசாமியை கைது செய்தனர்.