ADDED : ஜன 09, 2024 01:20 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகேதிருமணமான மனைவியைஅடித்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் மணிவேல், 35; இவரது மனைவி சங்கீதா, 28; ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. மணிவேல் அடிக்கடி சங்கீதாவிடம் தகராறு செய்து அடித்து துன்புறத்தி வந்துள்ளார்.
இது குறித்து சங்கீதா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் 3 முறை புகார் அளித்துள்ளார். அப்போதெல்லாம் போலீசார், இருவரையும் அழைத்து சமாதனம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் போலீசில் புகார் செய்த ஆத்திரத்தில் சங்கீதாவை, மணிவேல் மற்றும் அவரது அண்ணி மஞ்சுளா, தாய் லட்சுமி ஆகியோர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து மணிவேலை கைது செய்தனர்.