ADDED : அக் 09, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவைச் சேர்ந்த பரசுராமன் கட்டட தொழிலாளி. இவரது மனைவி ரோகிணி, 43; இவர் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். பரசுராமன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி ரோகிணியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மதுபோதையில் வந்த பரசுராமன், மனைவி ரோகிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பரசுராமன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து ரோகிணி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பரசுராமனை கைது செய்தனர்.