/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது
/
மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது
ADDED : டிச 13, 2024 10:28 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, உலகப்பசெட்டி கொல்லை தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பெரியம்மாள், 37; இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெரியம்மாளிள் நடத்தையில் சந்தேகம் அடைந்து, முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக பெரியம்மாள், ரோடுமாமந்துாரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி இரவு 9:30 மணியளவில் ரோடுமாந்துார் சென்ற முருகன், பெரியம்மாளிடம் தகராறு செய்து கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த பெரியம்மாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் முருகன், 45; மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.