UPDATED : நவ 12, 2026 09:53 PM
ADDED : நவ 12, 2026 09:50 PM
அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த எலியத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் மனைவி காயத்ரி, 20; ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 5ம் தேதி கணவன் மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், வீட்டிலிருந்து வெளியேறிய அஜித் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
