ADDED : டிச 25, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்; இளையனார்குப்பத்தில் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கோவிந்தன்,41; இவருக்கும், இவரது மனைவி பாப்பாத்திக்கும் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 8ம் தேதி சண்டை ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்து வீட்டிலிருந்து வெளியே சென்ற கோவிந்தன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடன் மனைவி பாப்பாத்தி போன் மூலமாக தொடர்பு கொண்ட போது கணவன் கோவிந்தனின் மொபைல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.