/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புறவழிச்சாலையில் 'ஹைமாஸ்' வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
புறவழிச்சாலையில் 'ஹைமாஸ்' வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : மே 24, 2025 12:12 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் புறவழிச்சாலையில் 'ஹைமாஸ்' விளக்குகளை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகதுருகம் நகரின் மேற்கே ரூ.11 கோடி திட்ட மதிப்பில் புறவழி சாலை அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி அருகில் இருந்து பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை புறவழிச் சாலை உள்ளதால், திருக்கோவிலுாரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்பவர்கள், தியாகதுருகம் நகருக்குள் நுழையாமல் நேரடியாக செல்ல முடிகிறது.
இந்த புறவழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பிறகு, நகரில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. அதேசமயத்தில்,புறவழி சாலை சந்திக்கும் இடத்தில் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக போதிய வழிகாட்டி பலகையும் வேகத்தடையும் அமைக்கப்பட்டிருந்தாலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.
புறவழிச் சாலை சந்திக்கும் இடத்தில் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்வதற்கு வசதியாக 'ஹைமாஸ்' விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.