ADDED : ஏப் 18, 2025 05:07 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 95 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.
அரசு எலும்பு முறிவு டாக்டர் கார்த்திகேயன், காது, மூக்கு, தொண்டை டாக்டர் கணேஷ்ராஜா, மனநல டாக்டர் விஜயகுமார், கண் டாக்டர் காயத்ரி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். இதில், 95 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன.
