/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிந்தனை வளர வேண்டுமெனில் அதிகளவில் புத்தகம் படிக்க வேண்டும் முன்னாள் டி.ஜி.பி., அட்வைஸ்
/
சிந்தனை வளர வேண்டுமெனில் அதிகளவில் புத்தகம் படிக்க வேண்டும் முன்னாள் டி.ஜி.பி., அட்வைஸ்
சிந்தனை வளர வேண்டுமெனில் அதிகளவில் புத்தகம் படிக்க வேண்டும் முன்னாள் டி.ஜி.பி., அட்வைஸ்
சிந்தனை வளர வேண்டுமெனில் அதிகளவில் புத்தகம் படிக்க வேண்டும் முன்னாள் டி.ஜி.பி., அட்வைஸ்
ADDED : செப் 04, 2025 02:39 AM

கள்ளக்குறிச்சி : சிந்தனை வளர வேண்டுமெனில் மாணவர்கள் அதிகளவில் புத்தகம் படிக்க வேண்டும் என்று முன்னாள் டி.ஜி.பி., அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் நடந்த தமிழ் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று பேசியதாவது;
உலகில் 8 கோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள். இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் சுமார் 4 லட்சம் பேர் படிக்கின்றனர். மாணவர்கள் தமிழின் பெருமை உணர்ந்து செயல்பட வேண்டும். உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உலகளவில் பெண்கள் அரசு பணி, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உயர்ந்த நிலையில் உள்ளனர். மாணவர்களுக்கு நினைத்ததை படிக்க சுதந்திரம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் கடந்து மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. பெண்கள் ராணுவத்தில் பணிபுரிய அதிக வாய்ப்புகள் உள்ளது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வங்கி தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெரும் வகையில் நன்றாக படிக்க வேண்டும்.
கல்வி என்பது சுயமாக சிந்திக்கும் திறனை கொண்டது. சிந்தனை வளர வேண்டுமெனில் அதிகமான புத்தகங்கள் படிக்க வேண்டும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 500 வரிகளாவது படிக்க வேண்டும். ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்றால் அதனை எப்படி படிக்க வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள் தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி, சமூக விழிப்புணர்வு போன்றவை குறித்து அறிந்து பயன்பெற வேண்டும் என பேசினார்.