/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் ஐ.ஜே.கே., பிரசாரம்
/
திருக்கோவிலுாரில் ஐ.ஜே.கே., பிரசாரம்
ADDED : பிப் 28, 2026 05:53 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் ஐ.ஜே.கே., கொள்கை விளக்கும் பிரசார பயணம் நடந்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐ.ஜே.கே., போட்டியிடும் விருப்பப்பட்டியலில் திருக்கோவிலுார் தொகுதி இடம் பெற்றிருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தொகுதி முழுவதும் ஐ.ஜே.கே., கொள்கை, நிறுவன தலைவர் பாரிவேந்தரின் நலத்திட்ட உதவிகளை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கயல்கோபு தலைமையிலான பிரசார பாடல் குழுவினர் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர்கள் காமராஜ், பொன்முடி தலைமை தாங்கினர். மாநில இலக்கிய அணி செயலாளர் சிதம்பரநாதன் வரவேற்றார்.
மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் பிரசார பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமார், மாவட்ட துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட வேந்தர் பேரவை செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட கல்வியாளர் குழு செயலாளர் வசந்தன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரீகன்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

