/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் பேரூராட்சியில் முன்மாதிரி திட்டங்கள் நிறைவேற்றம்
/
அரகண்டநல்லுார் பேரூராட்சியில் முன்மாதிரி திட்டங்கள் நிறைவேற்றம்
அரகண்டநல்லுார் பேரூராட்சியில் முன்மாதிரி திட்டங்கள் நிறைவேற்றம்
அரகண்டநல்லுார் பேரூராட்சியில் முன்மாதிரி திட்டங்கள் நிறைவேற்றம்
ADDED : பிப் 23, 2024 03:52 AM

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு வருவதாக அரகண்டநல்லுார் பேரூராட்சி தலைவர் அன்பு கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியின் ஆலோசனையின் பெயரில், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக நகரின் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற குடிநீர் வழங்க வகைசெய்யும் நடவடிக்கையாக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 7.42 கோடி மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஆசிரியர் நகரில் ரூ. 27 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளி அருகே விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுகிறது.
பச்சையம்மன் கோவில் அருகே வெள்ளம் ஏற்படும் காலங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும் சூழல் இருந்து, இதை நிவர்த்தி செய்யும் பொருட்கள் புதிதாக பாலம் கட்டப்பட்டு தடையற்ற போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தவும், கழிவு நீர் கால்வாய், புதிய தார் சாலைகள் அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்து வருகிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் முன்மாதிரி பேரூராட்சியாக மாற்ற துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியின் வழிகாட்டுதலுடன், செயல் அலுவலர், துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் துணையுடனும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது இவ்வாறு பேரூராட்சி தலைவர் அன்பு கூறினார்.