/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புக்குளத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்; பேரூராட்சி கவுன்சிலர் ஜெகதீஸ்வரி கோவிமுருகன் பெருமிதம்
/
புக்குளத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்; பேரூராட்சி கவுன்சிலர் ஜெகதீஸ்வரி கோவிமுருகன் பெருமிதம்
புக்குளத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்; பேரூராட்சி கவுன்சிலர் ஜெகதீஸ்வரி கோவிமுருகன் பெருமிதம்
புக்குளத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்; பேரூராட்சி கவுன்சிலர் ஜெகதீஸ்வரி கோவிமுருகன் பெருமிதம்
ADDED : பிப் 15, 2024 11:38 PM

புக்குளம் 14 வது வார்டில் 2 ஆண்டுகளில் ரூ.1 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கவுன்சிலர் ஜெகதீஸ்வரி கோவிமுருகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தியாகதுருகம் பேரூராட்சி, 14 வது வார்டு கவுன்சிலராக தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றேன். தலைவர் விஜயகாந்த் நல்லாசியோடு மக்கள் பணிகளை செய்து வருகிறேன்.
எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டப் பணிகளை செய்து, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறேன். எனது வார்டில் உள்ள வாணியர் தெருவில் பேவர் பிளாக் சாலை ரூ. 16 லட்சம் மதிப்பில் அமைத்துக் கொடுத்துள்ளேன்.
அக்ரஹார தெருவில் பொது நிதி மூலம் ரூ. 6 லட்சம் மதிப்பில் வடிகால், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.12 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
பெருமாள் கோவில் மற்றும் தெற்கு தெரு இணைப்பு சாலையில் ரூ. 3 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அரசு துவக்கப் பள்ளியில் ரூ. 7.50 லட்சத்தில் சமையல் கூடம், 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 48.5 லட்சத்தில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டி கொட்டகை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.2.50 லட்சத்தில் மினி டேங்க், போர்வெல், மற்றும் நபார்டு திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் தார் சாலை அமைத்து கொடுத்துள்ளேன்.
புக்குளம் மந்தைவெளி பஸ் நிறுத்தம் அருகே எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 5.50 லட்சத்தில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ. 10 லட்சத்தில், பெருமாள் கோவில் தெரு பேவர் பிளாக் சாலை, மயான பாதை இணைப்பு, ரூ.7 லட்சத்தில், தார் சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
தேர்தலின்போது கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை 2 ஆண்டில் நிறைவேற்றியுள்ளேன். தொடர்ந்து மக்களின் தேவை உணர்ந்து அவர்களுக்கு தொண்டு செய்ய காத்திருக்கிறேன். இவ்வாறு கவுன்சிலர் ஜெகதீஸ்வரி கோவிமுருகன் கூறினார்.