/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரோடுமாமந்துார் பம்புதோட்டத்தில் கேவிடி டவர் கட்டடம் திறப்பு விழா
/
ரோடுமாமந்துார் பம்புதோட்டத்தில் கேவிடி டவர் கட்டடம் திறப்பு விழா
ரோடுமாமந்துார் பம்புதோட்டத்தில் கேவிடி டவர் கட்டடம் திறப்பு விழா
ரோடுமாமந்துார் பம்புதோட்டத்தில் கேவிடி டவர் கட்டடம் திறப்பு விழா
ADDED : ஜன 25, 2024 04:13 AM

கள்ளக்குறிச்சி, : ரோடுமாமந்துார் பம்புதோட்டம் பகுதியில் அ.தி.மு.க., பிரமுகர் இல்ல கே.வி.டி., டவர் கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பம்புதோட்டம் அருகே அ.தி.மு.க., பிரமுகரும், சங்கராபுரம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை தலைவருமான கருணாநிதி - விஜயா இல்ல கே.வி.டி., டவர் கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மயில்மணி குமரகுரு பங்கேற்று குத்துவிளக்கேற்றினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேலுபாபு, பிரபு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வெற்றிவேல், துணை செயலாளர்கள் வினோத், பாரி, நகர செயலாளர்கள் கருப்பன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சன்னியாசி, பாண்டலம் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
புதியதாக திறக்கப்பட்ட கேவிடி டவர் தரைதளத்தில் ரெஸ்டாரண்ட் மற்றும் இரண்டு அடுக்கு மேல்தளங்களில் 17 தங்கும் அறைகள் வசதியுடன் அமைந்துள்ளது.