/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருவாவடுதுறை ஆதீன சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவக்க விழா
/
திருவாவடுதுறை ஆதீன சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவக்க விழா
திருவாவடுதுறை ஆதீன சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவக்க விழா
திருவாவடுதுறை ஆதீன சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவக்க விழா
ADDED : பிப் 26, 2024 06:29 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருக் கயிலாய பரம்பரை மெய்கண்டசந்தானம் திருவாவடுதுறை ஆதீன சைவ திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் 8வது தொகுப்பு துவக்க விழா நடந்தது.
ஏ.கே.டி., பள்ளி ஆடிட் டோரியத்தில் நடந்த விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கி பயிற்சி மையத்தை துவக்கி வைத்து சொற்பொழிவாற்றினார்.
திருமுறை பயிற்சி மைய இயக்குனர் சண்முகசுந்தரம் வாழ்த்திப் பேசினார்.
கந்தபுராண ஞானசபை நிறுவனர் தில்லை கார்த்திகேயசிவம் ஞான உரை வழங்கினார். சுவாமிநாதன் திருமுறை இசை பயிற்சி வழங்கினார்.
சைவ திருமுறை நேர்முகப் பயிற்சி மையம அமைப்பாளர் தமிழழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.