/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் அ.தி.மு.க.,வினர் துவக்க நாள் விழா கொண்டாட்டம்
/
தியாகதுருகத்தில் அ.தி.மு.க.,வினர் துவக்க நாள் விழா கொண்டாட்டம்
தியாகதுருகத்தில் அ.தி.மு.க.,வினர் துவக்க நாள் விழா கொண்டாட்டம்
தியாகதுருகத்தில் அ.தி.மு.க.,வினர் துவக்க நாள் விழா கொண்டாட்டம்
ADDED : அக் 18, 2024 07:02 AM

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் அ.தி.மு.க.,வின் 53வது துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது.
தியாகதுருகம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷ்யாம்சுந்தர் முன்னிலை வகித்தனர். தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிர்வாகிகள் அய்யம்பெருமாள், கிருஷ்ணராஜ், சுப்பிரமணியன், பால கிருஷ்ணன், மணிவண்ணன், வேலுமணி, பரியாஸ், ஏழுமலை, பாண்டு, மூர்த்தி, காமராஜ் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.