/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிஜிட்டல் கலர் லேப் திறப்பு விழா
/
டிஜிட்டல் கலர் லேப் திறப்பு விழா
ADDED : பிப் 25, 2024 05:37 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் எஸ்.எஸ்.வாசன் டிஜிட்டல் கலர் லேப் அண்ட் ஸ்டுடியோ திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார், பிடாரியம்மன் கோவில் தெருவில், புதுப்பிக்கப்பட்ட எஸ்.எஸ்.வாசன் டிஜிட்டல் கலர் லேப் மற்றும் ஸ்டுடியோ திறப்பு விழாவில் வெங்கடேஸ்வரன், ராஜா வரவேற்றனர். உரிமையாளர்கள் வாசன், அம்சாவேணி தலைமை தாங்கி திறந்து வைத்தனர்.
தொழிலதிபர்கள் முரளி, பாபு, முருகன், நகர மன்ற தலைவர் முருகன், தி.மு.க., நகர அவைத் தலைவர் குணா, சாரதா வித்யாஷ்ரம் தாளாளர் பிரபு, அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ்.
த.மா.கா., மாவட்ட தலைவர் கணேஷ், ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் செந்தில்குமார், ரோட்டரி கிளப் பொருளாளர் கோதம்சந்த், லயன்ஸ் கிளப் இரண்டாம் துணை நிலை ஆளுநர் ராஜா சுப்ரமணியம், தங்கம் மெட்டல் நாமதுறை, எம்.கே.எம்.எஸ்., அக்பர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்கள் சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.