/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரியில் ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா
/
அரசு கல்லுாரியில் ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா
ADDED : மார் 18, 2024 05:57 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லுாரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். ஆங்கில இலக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சபீதா வரவேற்றார்.
சேலம் அரசு கல்லுாரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் பார்த்திபன் ஆங்கில மொழியில் பேச்சு மற்றும் எழுத்தாற்றலை மேம்படுத்தும் வகையில் ஆங்கில இலக்கிய மன்றம் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, உடனடியாகத் தலைப்புக் கொடுக்கப் பட்டு நடத்தப்பட்ட ஆங்கில பேச்சு, ஆங்கில கட்டுரை, ஓவியம், இலக்கிய வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் முருகானந்தன் மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.
கல்லுாரி பேராசிரியர்கள் ராணி, ராமகிருஷ்ணன், நாபியா கரீம், ராஜா, அன்பரசு, பார்த்தசாரதி, அருள்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

