/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அறிவுசார் மையம் திறப்பு
/
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அறிவுசார் மையம் திறப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அறிவுசார் மையம் திறப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சியில் அறிவுசார் மையம் திறப்பு
ADDED : ஜன 06, 2024 05:16 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ரூ.1.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நுாலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெரு பகுதி, சீதாராம் நகரில் ரூ.1.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நுாலகத்துடன் கூடிய அறிவுசார் மைய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக அறிவுசார் மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார், கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் நுாலகத்திற்குள் சென்று, அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறியதாவது:
நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலான புத்தம், பொதுஅறிவு, கட்டுரை மற்றும் கதை புத்தகங்கள் உள்ளன.
குறிப்பாக, பொதுமக்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக காற்றோட்டமான கட்டமைப்பு வசதியும், நுாலகத்தில் நாற்காலிகளும், கணிணி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில், நகராட்சி சேர்மன் சுப்ராயலு, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, நகர துணை சேர்மன் சமீம்பானு அப்துல்ரசாக், மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன், தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் தாமோதரன், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர்மன்ற பொறியாளர் பழனி, நிர்வாகி ரமேஷ், நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.