/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுதானிய விழிப்புணர்வு ஊர்தி கலெக்டர் துவக்கி வைப்பு
/
சிறுதானிய விழிப்புணர்வு ஊர்தி கலெக்டர் துவக்கி வைப்பு
சிறுதானிய விழிப்புணர்வு ஊர்தி கலெக்டர் துவக்கி வைப்பு
சிறுதானிய விழிப்புணர்வு ஊர்தி கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : அக் 21, 2024 04:04 AM

கள்ளக்குறிச்சி : சிறுதானிய விழிப்புணர்வு விளம்பர ஊர்தி பிரசாரம் கள்ளக்குறிச்சியில் துவங்கியது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் துவங்கிய சிறுதானிய விழிப்புணர்வு ஊர்தியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
இந்த ஊர்தி மூலம் சிறுதானியங்களில் அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துதல். விதை நேர்த்தி செய்தல், வரிசை விதைப்பு செய்தல், உயிர் உரங்கள் இடுதல், நுண்ணுாட்ட உரங்கள் இடுதல்.
சமச்சீர் உரமிடுதல் போன்றவை குறித்தும், சிறுதானியங்களான சோளம், கம்பு, குதிரைவாலி, ராகி ஆகியவை மானாவாரி சாகுபாடிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை என இவற்றின் பல்வேறு சிறப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார்சிங், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், வேளாண் துணை இயக்குனர் விஜயராகவன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.