/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கால்நடை கிளை நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
கால்நடை கிளை நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : ஜன 04, 2024 06:04 AM

ரிஷிவந்தியம்: பழையசிறுவங்கூர் கிராமத்தில் புதிய கால்நடை கிளை நிலையத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
வாணாபுரம் அடுத்த பழையசிறுவங்கூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி புதிய கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைத்தார்.
கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் லதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர் நவீன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,கிடாரி கன்று வளர்ப்பு மற்றும் கால்நடை மேலாண்மையில் சிறந்து விளங்கிய 5 விவசாயிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது, கால்நடைத்துறை துணை இயக்குனர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, ஊராட்சி தலைவர்கள் செல்விபால்ராஜ், ராமமூர்த்தி, கோமதிசுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ், நிர்வாகிகள் பிலோமினாள், சக்திவேல், சிவமுருகன், செல்வகுமார், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.