/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சொத்து வரி கட்டினால் ஊக்கத் தொகை: சங்கராபுரம் பேரூராட்சி அறிவிப்பு
/
சொத்து வரி கட்டினால் ஊக்கத் தொகை: சங்கராபுரம் பேரூராட்சி அறிவிப்பு
சொத்து வரி கட்டினால் ஊக்கத் தொகை: சங்கராபுரம் பேரூராட்சி அறிவிப்பு
சொத்து வரி கட்டினால் ஊக்கத் தொகை: சங்கராபுரம் பேரூராட்சி அறிவிப்பு
ADDED : செப் 28, 2024 07:26 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் பேரூராட்சியில் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் செய்திக்குறிப்பு:
சங்கராபுரம் பேரூராட்சியைச் சேர்ந்தவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் படி தங்களது சொத்து வரியை முதல் அரையாண்டு எப்ரல் முதல் செப்டம்பர் முடிய செலுத்தி 2.5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். தவறினால் ஒரு சதவீதம் மாதாந்திர வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.
இரண்டாம் அரையாண்டு சொத்து வரி தொகையை அக்டோபர் முதல் மார்ச் 2025 வரை அக்டோபர் மாதத்திலேயே செலுத்தி 2.5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். தவறினால் 1 சதவீத மாதாந்திர வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.
எனவே சங்கராபுரம் பகுதி மக்கள் உரிய காலத்தில் சொத்து வரியை செலுத்தி அபராத தொகையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.