/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து... அதிகரிப்பு; அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து... அதிகரிப்பு; அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து... அதிகரிப்பு; அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு வரத்து... அதிகரிப்பு; அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 31, 2024 02:09 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் பொருட்களுக்கு விலையும் வரத்தும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி, ஆர்.ஆர்.குப்பம், மூலசமுத்திரம், பு.கொணலவாடி, பாண்டூர், செல்லூர் வெள்ளையூர், காட்டுநெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். விவசாய பொருட்கள் அதிகயளவில் மார்க்கெட் கமிட்டிக்கு வருவதால் வரத்து அதிகரித்து கூடுதல் விலை கிடைக்காமல் இருந்து வந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அங்கு அரசு நிர்ணயித்த விலை விவசாய பொருட்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் மார்க்கெட் கமிட்டியை விட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் அதிகளவில் பொருட்களைக் கொண்டு சென்றனர்.
தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு எப்போதும் இல்லாத அளவில் நேற்று முன்தினம் அதிகளவில் விவசாய பொருட்களைக் கொண்டு வந்தனர். இதனால் மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் திணறியதோடு, விவசாய பொருட்களை எடை அளவீடு செய்ய முடியாமல் தவித்தனர். இதனால் நேற்று விவசாய பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வர வேண்டாம் என மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
அதே நேரத்தில் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு 8 ஆயிரம் நெல் மூட்டைகள் ரூபாய். ஒரு கோடியே 31 லட்சத்து 23, 634 தொகையில் கொள்முதல் செய்யப்பட்டது. அதேபோல், 2, 250 உளுந்து மூட்டைகள் ரூபாய். 2 கோடியே 11 லட்சத்து 51, 663, 237 மக்காச்சோளம் மூட்டைகள் ரூபாய். 4 லட்சத்து 88, 571,, 122 கம்பு மூட்டைகள் ரூபாய். 6 லட்சத்து 49, 145 தொகையில் கொள்முதல் செய்யப்பட்டது. , பச்சை பயிர், தட்டப்பயிர், ராகி, எள் என விவசாய பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
மார்க்கெட் கமிட்டிக்கு விவசாய பொருட்கள் வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்காமல் வங்கிகள் மூலம் செலுத்துவதால் கால தாமதம் ஏற்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு கமிட்டிக்கு அருகே உள்ள வியாபாரிகள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் பொருட்களை வாங்கிக்கொண்டு கையிலேயே பணம் தந்து விடுகின்றனர். இதனால் பல விவசாயிகள் காலதாமதம், சிரமத்தை சந்திப்பதற்கு பதிலாக தங்களது பொருட்களை வெளி வியாபாரிகளிடம் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு கமிட்டிக்கு கொண்டுவரப்படும் பொருட்களுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.