தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு!குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு!குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு!குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை தேவை


UPDATED : மே 24, 2026 07:11 PM

ADDED : மே 24, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 07:11 PM ADDED : மே 24, 2026 07:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க போலீசார் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி விஜயலட்சுமி, 56; இவர், கடந்த ஏப்., மாதம் 20ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான சேலம் மாவட்டம், செக்கடிப்பட்டு கிராமத்திற்கு சென்றார்.

வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் உட்பட 28 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதேபோல், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கடந்த ஏப்., 25ம் தேதி இரவு வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள பார்ட்ச்யூனர் காரினை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் லஷ்மி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சுஜாதா, 41; கடந்த 12ம் தேதி சுஜாதா தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சேலத்திற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பகலிலேயே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

கடந்த 15ம் தேதி இரவு கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர். மறுநாள் கடையை திறந்தபோது கடையின் மேற்புற தளத்தை துளையிட்டு திருட முயற்சித்தது தெரிந்தது.

சின்னசேலம் அடுத்த பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி தையல்நாயகி, 41; இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன் வரண்டாவில் படுத்து துாங்கினார். மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், தையல்நாயகி வீட்டிற்கு அருகே உள்ள பெரியசாமி மனைவி பூச்சி,56; என்பவரது வீட்டின் முன்பக்க கதவையும் உடைத்து, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றனர்.

இதுதவிர கள்ளக்குறிச்சி நகர பகுதியில் வீட்டிற்கு முன் நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகள் குறிவைத்து திருடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க எஸ்.பி., ஷஹ்னாஸ் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை அவசியம்

கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் பலர் வீட்டை பூட்டி விட்டு சுற்றுலா தளங்கள், கோவில்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்கின்றனர். நீண்ட நாட்களாக வீடுகள் பூட்டி கிடப்பதை நோட்டமிடும் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடி செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் வெளியே செல்வதற்கு முன், அருகாமையில் வசிப்பவர்களிடமும், போலீசாரிடமும் தகவல் தெரிவிப்பது அவசியம். அதேபோல், வெப்பம் காரணமாக பொதுமக்கள் இரவில் வீட்டுக்குள் துாங்குவதை தவிர்த்து, வீட்டிற்கு வெளிப்பகுதியில் துாங்குகின்றனர். அப்போது, வீடுகளின் பின் கதவுக்கு தாழ்ப்பாள் மட்டுமே போடுகின்றனர். இதனை மர்ம நபர்கள் எளிதாக நெம்பி திறந்து விடுகின்றனர். எனவே, பின்பக்க கதவிலும் பூட்டு பயன்படுத்த வேண்டும். மேலும், வீட்டிற்கு முன் பைக் நிறுத்துபவர்கள் 'சைட்லாக்'கினை மட்டும் நம்பாமல், கூடுதலாக 'வீல் லாக்' மற்றும் அருகில் உள்ள துாணில் செயின் பயன்படுத்தி பூட்டுக்களை போட வேண்டும். பொதுமக்கள் இதுபோன்று முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us