/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : பிப் 15, 2024 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்:தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருராட்சி அதிகாரிகள் கடந்த காலங்களில் கடைகளில் சோதனை செய்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தடையை மீறி விற்ற கடை உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.
கடந்த ஓராண்டாக அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், சங்கராபுரம் நகரில் உள்ள கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.