/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 412 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
/
கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 412 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 412 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினவிழா கோலாகலம்! 412 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : ஆக 15, 2025 11:22 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிவிளையாட்டு மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, 30 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி., மாதவன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, திறந்த காரில் நின்றபடி சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு, ஏற்றுக் கொண்டார்.
பின், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள், ஊரக வளர்ச்சி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உட்பட பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் 408 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 4 சிறந்த வங்கி மேலாளர்கள் என மொத்தம் 412 பேரின் பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற போலீசாருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இன்னாடு அரசு உண்டு, உறைவிட பள்ளி, தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, எலவனாசூர்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உளுந்துார்பேட்டை சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இளம் செஞ்சிலுவை சங்கம், சாரண, சாணியர் இயக்கம் சார்பில் 968 பள்ளி மாணவ, மாணவிகளின் ஆடல், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், அணி வகுப்பும் நடந்தது.
கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு கலெக்டர் பிரசாந்த் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ. , ஜீவா, திட்ட இயக்குநர்கள் ரமேஷ்குமார் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), சுந்தர்ராஜன் (மகளிர் திட்டம்), சி.இ.ஓ., கார்த்திகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி மறைந்த கிருஷ்ணசாமியின் மனைவி ராஜகுமாரி என்பவரது வீட்டிற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று கவுரவித்தனர்.