ADDED : ஜன 07, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை அமெரிக்க ராணுவம் கைது செய்தை கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பரமணி, அப்பாவு, பொருளாளர் கலியபெருமாள், நிர்வாகிகள் கஜேந்திரன், சின்னசாமி, சிவக்குமார், கோவிந்தராஜ், ரீத்தா,மாநில நிர்வாகக்குழு சந்திரசேகர ஆசாதி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார், சங்கராபுரம், கல்வராயன்மலை, மணலுார்பேட்டை, தியாகதுருகம், திருநாவலுார் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
