ADDED : ஜன 07, 2026 06:27 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலையத்திற்கு புறவழி சாலையுடன், இணைப்பு சாலையை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணியை விரைந்து நிறைவு செய்து திறக்க வேண்டும். உழவர் சந்தை அமைக்க வேண்டும், அம்மா உணவகம் உள்ளிட்ட நகரில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்த கோரிக்கையை முன் வைத்து இந்திய கம்யூ., கட்சியின் திருக்கோவிலுார் நகர குழு சார்பில் பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் கிப்ஸ் தலைமை தங்கினார். முன்னாள் நகர செயலாளர் பஷீர் அகமது, நகர துணை செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் பாக்கியம், நகர பொருளாளர் அமீர், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் கதிர்வேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
