/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒற்றை சாளர இணையதளத்தில் தொழில் நிறுவன உரிமம் பெறலாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
/
ஒற்றை சாளர இணையதளத்தில் தொழில் நிறுவன உரிமம் பெறலாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ஒற்றை சாளர இணையதளத்தில் தொழில் நிறுவன உரிமம் பெறலாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ஒற்றை சாளர இணையதளத்தில் தொழில் நிறுவன உரிமம் பெறலாம்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ADDED : டிச 04, 2024 10:34 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கான ஒப்புதல்கள் உரிமங்கள் பெறுவதற்கு ஒற்றைச் சாளர இணைதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு :
தொழில் நிறுவனங்கள் துவங்கிட, விரிவுபடுத்த தேவையான உரிமங்கள் கோரும் விண்ணப்பங்களை பெறுதற்கு தமிழக அரசு ஒற்றைச் சாளர இணையதளம் www.tnswp.com அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்மூலம் தொழில் வணிக ஒப்புதல்கள், உரிமங்கள், அனுமதிகள், தடையில்லாச் சான்றிதழ்கள் பெற முடியும்.
இதன் மூலம் 40க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள் வழங்கும் 200க்கும் மேற்பட்ட சேவைகள் பெறலாம். இதில் விண்ணப்பித்தவுடன், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பம் குறித்த முடிவு எடுக்கப்படும். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முறையை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்.
மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக செயல்படுத்திட உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்.
தொழில் முதலீட்டாளர்கள் இத்தளத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.04151-294057 மூலமாகவோ அணுகலாம் என தெரிவித்துள்ளார்.