ADDED : ஏப் 14, 2026 09:38 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லுார், வீரபாண்டியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை உருவாக்கும் வகையில், குறிப்பாக பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டிருக்கும் திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டியில் மணம்பூண்டியில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சர்குணம், கோவிந்தன் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் துவங்கி கடைவீதி வழியாக மணம்பூண்டியை வந்தடைந்தனர். அதேபோல் வீரபாண்டியில் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுத்து நடந்தது.
