/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நடுநிலைப் பள்ளியில் புத்தாக்க பயிற்சி
/
நடுநிலைப் பள்ளியில் புத்தாக்க பயிற்சி
ADDED : செப் 11, 2025 11:00 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கத்தின் புத்தாக்க பயிற்சி மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சுபத்ரா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பவுல் ரட்சகநாதன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர், கள்ளக்குறிச்சி உஷா பட்டு மாளிகை உரிமையாளர் பெருமாள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
ஜூனியர் ரெட் கிராஸ் இயக்க மாவட்ட கன்வீனர் மாயக்கண்ணன், துணை கன்வீனர் மாலன், இணை கன்வீனர் துரை, மாவட்ட பயிற்சியாளர் ஆறுமுகம், வட்ட தலைவர் ஜான்பால், ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் பாலமுருகன், அக்கராயபாளையம் ஆசாத் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகர், நிர்வாகிகள் செல்லதுரை, வெங்கடேசன், தமிழரசன் ஆகியோ ர் மாணவர்களுக்கு ஜே.ஆர்.சி.,யின் இந்த ஆண்டு நடத்தபட வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து மழைக்கால நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட இணை கன்வீனர் ஜெரோம் நன்றி கூறினார்.