/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் 2,860 மாணவிகள் 3,432 மாணவர்கள் பலன்
/
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் 2,860 மாணவிகள் 3,432 மாணவர்கள் பலன்
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் 2,860 மாணவிகள் 3,432 மாணவர்கள் பலன்
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் 2,860 மாணவிகள் 3,432 மாணவர்கள் பலன்
ADDED : ஜூலை 27, 2025 11:08 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 2,860 மாணவிகள், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 3,432 மாணவர்கள் பயனடைகின்றனர்.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பொருளாதார சிக்கல் காரணமாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு முடித்தவுடன் உயர்கல்வி சேர்க்கையை அதிகரித்திட சமூக நலன், மகளிர் உரிமைத் துறை மூலம் 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 2,860 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 3,432 மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இதில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன் முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ஐ.டி.ஐ., இளநிலை உயர்கல்வி ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகையாக மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர்கள் இருந்தாலும் இத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறலாம். இத்திட்டங்களின் கீழ் பதிவு செய்ய புதிய 'யு.எம்.ஐ.எஸ்' எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனங்களிலேயே விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே, உயர் கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியரும் மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற ஆதார் அட்டை, வங்கி கணக்கு சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.