/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி
/
மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி
ADDED : ஆக 15, 2025 10:49 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று மன்ற மாணவிகளுக்கு கல்வெட்டுகளை படி எடுப்பது, பாதுகாப்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று மன்ற மாணவிகளுக்கு கல்வெட்டுகளை சுத்தம் செய்து முறையாக படி எடுப்பது எவ்வாறு, அதனை பாதுகாக்கும் முறை குறித்து அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டில், நேரடி செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் தலைமை தாங்கி விளக்கினார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் பயிற்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
ஆய்வு நடுவத்தின் துணைச் செயலாளர் கார்த்திகேயன், அறங்காவல் குழு தலைவர் உமா மகேஸ்வரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் அள்ளி, மஞ்சுளா, காமாட்சி, ரேவதி, சூர்யா, துர்கா தேவி மற்றும் மன்றத்தைச் சேர்ந்த 60 மாணவிகள் பங்கேற்றனர்.