ADDED : நவ 23, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வயிற்று வலியால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 66; குடிப்பழக்கம் இருந்தால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த குப்புசாமி நேற்று (நவ.,22) மதியம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் அன்று இரவு இறந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
