/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிதிருவரங்கம் துவக்கப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
ஆதிதிருவரங்கம் துவக்கப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஆதிதிருவரங்கம் துவக்கப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஆதிதிருவரங்கம் துவக்கப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : அக் 26, 2024 07:35 AM

ரிஷிவந்தியம் : ஆதிதிருவரங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் நாகராஜ முருகன், ஆதிதிருவரங்கம் தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குழந்தைகளின் படிக்கும் மற்றும் எழுதும் திறன், கணித செயல்பாடுகளில் மாணவர்களின் அடைவு நிலை குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், மணலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்து 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என்று என அறிவுரை வழங்கினார்.
உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மாயவேல் உடனிருந்தனர்.