/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் ஆய்வு
/
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் ஆய்வு
ADDED : ஜூலை 10, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 27 பள்ளி, கல்லுாரி விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது.
தமிழக அரசு உத்தரவின் பேரில், விடுதிகளின் செயல்பாடு குறித்து கண்காணிக்க துணை கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதிகளுக்கு சென்று, தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை, பணியாளர்களின் வருகை, பட்டியலில் உள்ளவாறு உணவு வழங்கப்படுகிறதா, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

