ADDED : ஜூன் 24, 2026 01:03 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் இன்ஸ்பெக் டர் உட்பட 3 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கலையரசி, ஏட்டுகள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகி யோர் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.
எஸ்.பி., ஷஹ்னாஷ் விசாரணையில் இது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் ஏட்டுகள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
