ADDED : பிப் 28, 2026 05:58 AM

அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: கரியாலுார் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பாலமுரளி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கல்வராயன்மலையில் உள்ள 145 கிராமங்களுக்கு கரியாலுார் ஊராட்சியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையின் கீழ் கரியாலுார் இயங்கி வந்தது. கரியாலுார் போலீஸ் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமித்து அரசு அறிவித்தது. அதன்படி, புதிய இன்ஸ்பெக்டராக பாலமுரளி நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்று கொண்டார். இவர் காரியாலுார் போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
