UPDATED : ஜூன் 18, 2026 04:33 PM
ADDED : ஜூன் 18, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்:மணலுார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டர் அசோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மணலுார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வனஜா, கடலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து கடலுார் புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய அசோகன் மணலுார்பேட்டை இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் மணலுார்பேட்டை காவல் நிலையத்தில் அசோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்து, அறிமுகம் செய்து கொண்டனர்.
