/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழைக்கால மின் விபத்துக்களை தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு
/
மழைக்கால மின் விபத்துக்களை தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு
மழைக்கால மின் விபத்துக்களை தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு
மழைக்கால மின் விபத்துக்களை தவிர்க்க வழிமுறைகள் வெளியீடு
ADDED : அக் 21, 2025 09:30 PM
கள்ளக்குறிச்சி: கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கட்டடங்களில் தரமான மின் வயரிங் பொருட்கள் பயன்படுத்த வேண்டும். சரியான நில இணைப்பு கொடுக்க வேண்டும். எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் அவசியம் பொருத்த வேண்டும். பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைப்பதன் மூலம் விபத்தினை தவிர்க்கலாம். மின்சார கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர், கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்க கூடாது. குளியலறை, கழிப்பறைகளில் சுவிட் பொருத்த வேண்டாம். மின்கம்பங்கள், அவற்றை தாங்கும் மின் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது. மழைக்காலங்களில் மின்மாற்றிகள், கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகே செல்ல கூடாது. மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.மின்சாரத்தினால் தீ விபத்து ஏற்பட்டால் உடனே மெயின் சுவிட்ச் நிறுத்த வேண்டும். இடி அல்லது மின்னலின்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் மொபைல்போன் பயன்படுத்த வேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவுகள் அருகில் இருக்க வேண்டாம்.
விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு மின்வேலி அமைக்கும் பட்சத்தில் அமைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்பாதை அடியிலோ, அருகிலோ மின்கம்பிகளை தொடும்படி மரம், செடி, கொடிகளை வளர்க்க வேண்டாம். பழுதடைந்த மின்கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் பற்றி 94987 94987 என்ற மொபைல் எண்ணிலும் அல்லது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டுதெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.