/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் விற்பனையை தடுக்க தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்
/
போதை பொருள் விற்பனையை தடுக்க தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்
போதை பொருள் விற்பனையை தடுக்க தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்
போதை பொருள் விற்பனையை தடுக்க தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்
ADDED : பிப் 02, 2025 06:41 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடைகளில் திடீர் தணிக்கை விபரம், மருந்தகங்கள் ஆய்வு, வழக்குகள் விபரம், பொதுமக்கள் மற்றும் கல்லுாரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் தலைமையிலான குழுவினர், தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறா என்பதை கண்காணித்து, துறை சார்ந்த அலுவலர்களுக்கு தவகல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் மற்றும் காவல், கலால், வருவாய், பள்ளி கல்வி துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.