/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.எம்.கிசான் ஊக்க தொகை பெற நில விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
/
பி.எம்.கிசான் ஊக்க தொகை பெற நில விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
பி.எம்.கிசான் ஊக்க தொகை பெற நில விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
பி.எம்.கிசான் ஊக்க தொகை பெற நில விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2025 07:43 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பி.எம். கிசான் ஊக்கத் தொகை பெற நில விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சிவக்குமார் செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டப்பலன்களை பெறுவதற்கு, விவசாயிகள் தங்களின் பயிர் சாகுபடி அறிக்கை உள்ளிட்ட விபரங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால் கால தாமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு திட்டங்கள் விரைவாக விவசாயிகளுக்கு கிடைக்க, மின்னனு முறையில் தகவல் சேகரிக்கும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில ஆவணங்களை இணைக்கும் பணி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் நடந்து வருகிறது.
பி.எம்.கிசான் பெற்று வரும் விவசாயிகள் கட்டாயம் நில விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தவறினால் அடுத்த ஊக்க தொகை நிதி நிறுத்தி வைக்கப்படும்.
எனவே, விவசாயிகள் கிராமங்களுக்கு வரும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அல்லது பொது சேவை மையங்களுக்கு சென்று, நில ஆவணங்களுடன் ஆதார், மொபைல் எண் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.