/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறப்பு
/
ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறப்பு
ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறப்பு
ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறப்பு
ADDED : ஜூலை 05, 2025 03:38 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததையொட்டி, கலெக்டர் பிரசாந்த் குத்துவிளக்கேற்றி அலுவலக செயல்பாட்டை துவக்கி வைத்தார்.
திருக்கோவிலுார், கீரனுார் புறவழிச் சாலையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ. 3 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் வேளாண் விரிவாக்க மையத்தினை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் குத்து விளக்கேற்றி அலுவலக செயல்பாட்டினை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், தாசில்தார் ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு சேர்மன் அஞ்சலாட்சி அரசகுமார், துணை சேர்மன் தனம்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிவக்குமார், வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.