/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : செப் 25, 2025 04:30 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர், துணைத்தலைவர் ரவிசங்கர், கல்லுாரி ஆளுநர் மதிவாணன், டீன் அசோக் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறைத்தலைவர் அருள்முருகன், சிங்கப்பூர் சிட்டி வங்கி தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பிரிவு துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வணிக ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பிலும், விவசாயம், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நிதிமேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினார். தமிழகத்தின் பல மாவட்ட மாணவர்கள் நேரடியாக பங்கேற்று கட்டுரை சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து, ஆர்.கே.எஸ்., கல்லுாரி பெயரில் பன்னாட்டு தர புத்தக எண்ணுடன் கூடிய ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு வெளியிடப்பட்டது. ஏற்பாடுகளை உதவிபேராசிரியர்கள் சுபாஷினி, ராஜேஸ்வரி, செல்வராணி, வினோதினி, ஜனனி செய்திருந்தனர். உதவி பேராசிரியர் அனந்தராமன், கோமதி, உட்பட பலர் கலந்து கொண்டனர். வணிக மேலாண்மை துறைத்தலைவர் ராஜா நன்றி கூறினார்.