/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்காணல்
/
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்காணல்
ADDED : நவ 28, 2024 05:33 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பித்தோருக்கு நேர்காணல் துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் 70 விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்திற்கு தகுதி உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, 5,091 1பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் பல்வேறு காரணங்கலால் 116 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
மீதமுள்ள 4 , 979 விண்ணப்பதாரர்கள், நேர்காணலில் பங்கேற்குமாறு ஆன்லைனில் 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி சி.எம்.எஸ்., வளாகத்தில் நேர்காணல் நேற்று முன்தினம் காலை துவங்கியது.
இதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் 36 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 18 பேர் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். 18 பேர் நேர்காணல் நடத்தினர். 900க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் நேற்று நடந்த நேர்காணலில் பங்கேற்றனர். வரும் 30ம் தேதி வரை நேர்காணல் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சுரேஷ் ஆகியோர் நேர்காணலை ஆய்வு செய்தனர்.