/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு
/
மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு
ADDED : டிச 01, 2024 06:49 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணிக்கு முதல்கட்ட நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது.
பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., - டி.எம்.எல்.டி., - ஏ.என்.எம்., (பிளஸ் 2விற்கு பின் இரண்டு ஆண்டுகள் படிப்பு) அல்லது பி.எஸ்சி., உயிரியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகளை படித்து முடித்த 30க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் குமரன் எழுத்து தேர்வு, முதலுதவி மேற்கொள்ளுதல் மற்றும் செவிலியர் தொடர்பான கேள்விகளை கேட்டறிந்தார். தேர்வு செய்யப்பட்ட 15 பேர் அடுத்த கட்ட பயிற்சிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

