UPDATED : அக் 20, 2026 06:20 PM
ADDED : அக் 20, 2026 06:14 PM

கள்ளக்குறிச்சியில் நடந்த அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் பேட்டி:
மறக்க முடியாத நிகழ்வு
‘தினமலர்’ சார்பில் நடந்த அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் எனது மகனை அழைத்து வந்து முதல் முறையாக அ, ஆ வை நெல்லில் எழுதியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. அதற்கு ‘தினமலர்’ நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடக்கம் என் மகனின் எதிர்கால கல்விக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்த வேண்டும்.
–சரண்யா, பெருவங்கூர்.
மகிழ்ச்சியாக உள்ளது
கல்விக்கு சிறந்த நாளான விஜயதசமி நாளில் மாவட்டத்தில் உயர் பதவிகளில் உள்ள கலக்டர், எஸ்.பி., சி.இ.ஓ., கல்வியாளர்கள் போன்றவர்களின் மடியில் அமர வைத்து எங்கள் குழந்தைகளுக்கு அரிச்சுவடி ஆரம்பித்து வைத்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவர்களின் ஆசியோடு குழந்தைகளின் கல்வி பயணம் துவங்கியது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இது போன்ற நிகழ்வுகளை ‘தினமலர்’நாளிதழ் சமூக சேவையாக செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
–நிவேதா, கள்ளக்குறிச்சி.
நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
குழந்தைகள் தங்கள் எதிர்கால வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வியே சிறந்த வழியாக உள்ளது. அந்த கல்வியை முதன் முதலில் ஆரம்பித்து வைக்கும் மிக உயர்ந்த பணியை ‘தினமலர்’ நாளிதழ் துவக்கி வைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்த விளங்கி சிறப்பு பெற்ற மனிதர்கள் மூலம் குழந்தைகளின் கல்வியை துவங்குவது குழந்தைகளின் எதிர் கால வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
–ஹரிபிரியா, கள்ளக்குறிச்சி.
இந்நிகழ்ச்சியை வரவேற்கிறோம்
‘தினமலர்’ சார்பில் நடந்த அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று எனது குழந்தையின் கல்வியை துவங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் குழந்தையின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் மற்றும் வாய்ப்பாடு, பேக், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கியது, பயனுள்ளதாகவும் கூடுதல் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் வகையில் ‘தினமலர்’ ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சி நடத்துவதை வரவேற்கிறோம்.
–குழந்தைவேல், சின்னசேலம்.
தினமலரின் உயரிய நோக்கம்
‘தினமலர்’ பட்டம் சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினர். குழந்தைகளுக்காக பலுான் வீடு, மிக்கி மவுஸ், கரடி வேடமணிந்து குழந்தைகளுடன் விளையாடியவர்களுடன் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் குழந்தைகளின் அறிவாற்றலை பெருக்க வி.ஆர்.லேப் கண்காட்சி நடத்தியது பயனுள்ளதாக இருந்தது.
–சிவா, கடத்துார்.
