/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதலீட்டாளர் மாநாடு துவக்க விழா; கள்ளக்குறிச்சியில் நேரடி ஒளிபரப்பு

ADDED : ஜன 09, 2024 01:07 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு துவக்க நேரலை நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார்.
சென்னையில் 'உலக முதலீட்டாளர் மாநாட்டு 2024' நேற்று முன்தினம் துவங்கியது.
மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள், தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சியை நேரடியாக காண, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் சமூக வலைதளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நேரடி ஒளிபரப்பினை கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், 11 தனியார் கலைக் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளிலும் உலக முதலீட்டாளர் மாநாடு நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.